மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை நம் நாட்டில் அறிமுகம் செய்வதற்கு ஏதாவது அத்தியாவசியமான காரணம் உள்ளதா என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை பயிரிட அனுமதி அளித்தால், சுற்றுச் சூழல் மாசு ஏற்படும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கின் விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில், மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு பரிந்துரைப்படியே இது செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து வரைவு விதிமுறைகளை உருவாக்குவதில் எந்த பிரச்னையும் இல்லை என்று தெரிவித்தனர்.
இதையடுத்து நீதிபதிகள், தற்போதைய சூழலில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகை நம் நாட்டில் அறிமுகம் செய்வதற்கு அத்தியாவசியமான காரணம் ஏதாவது உள்ளதா என்பதை அறிய விரும்புகிறோம். பாதுகாப்பு நடவடிக்கை, பரிசோதனை, ஆலோசனையை பெற்றபின் இதை அறிமுகம் செய்யலாமே என்று கேள்வி எழுப்பியுள்ளனர். வழக்கின் விசாரணையை 7ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.