இண்டிகோ நிறுவனம் புதிய பிசினஸ் கிளாஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்திய விமான சேவை நிறுவனமான இண்டிகோ, தனது 18 வது ஆண்டு விழாவை முன்னிட்டு பிசினஸ் கிளாஸ் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இண்டிகோ, ஒரு நாளில் 2200 விமானங்களை இயக்கும் நிறுவனமாக, தற்போது பிசினஸ் கிளாஸ் சேவையை தொடங்கி, அதனை பல்வேறு கட்டத்தில் பரவலாக்கும் திட்டம் எடுத்துள்ளது. டெல்லி-மும்பை மார்க்கில், 6E6814 விமானம் இந்த சேவையை வழங்குகிறது. இந்நிகழ்ச்சியில், இண்டிகோ நிறுவனத்தின் சிஇஓ பியட்டர் எல்பர்ஸ், இந்த பிசினஸ் கிளாஸ் சேவையை குறித்து பகிர்ந்துள்ளார். மேலும் இதன் டிக்கெட் விலை ₹18,018 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.