இந்தியன் ஆயில் நிறுவனத்தின் புதிய இருசக்கர வாகன இன்ஜின் ஆயில் அறிமுகம்

June 8, 2023

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், இருசக்கர வாகனங்களுக்கான புதிய இன்ஜின் ஆயில் பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. செர்வோ ஹைப்பர் போர்ட் எஃப் 5 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இன்ஜின் ஆயில், சிந்தடிக் 4டி ரகத்தை சேர்ந்ததாகும். பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் இதனை வெளியிட்டார். இதனுடன் சேர்த்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ப்ரீமியம் கிரீஸ் வகை - செர்வோ கிரீஸ் மிராக்கிள் ஐ யும் அறிமுகம் செய்தார். இந்த புதிய வகை இன்ஜின் ஆயிலை, B5 VI […]

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம், இருசக்கர வாகனங்களுக்கான புதிய இன்ஜின் ஆயில் பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. செர்வோ ஹைப்பர் போர்ட் எஃப் 5 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த இன்ஜின் ஆயில், சிந்தடிக் 4டி ரகத்தை சேர்ந்ததாகும். பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் இதனை வெளியிட்டார். இதனுடன் சேர்த்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ப்ரீமியம் கிரீஸ் வகை - செர்வோ கிரீஸ் மிராக்கிள் ஐ யும் அறிமுகம் செய்தார்.

இந்த புதிய வகை இன்ஜின் ஆயிலை, B5 VI 28 விதிமுறைகளுக்கு உட்பட்டு தயாரிக்கப்படும் அனைத்து வகை இருசக்கர வாகனங்களிலும் பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வகையான வானிலை சூழல்களிலும் செயல்படும் வகையில், இது தயாரிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. மேலும், லித்தியம் அடிப்படையிலான கிரீசுக்கு மாற்றாக, அதிக செயல்திறன் கொண்ட வகையில் செர்வோ கிரீஸ் மிராக்கிள் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu