எங்கிருந்தாலும் பிசியோதெரபி ஆலோசனை பெற ‘என் பிசியோ ’ செயலி அறிமுகம்

எங்கிருந்தாலும் ஆலோசனை பெற வசதியாக ‘என் பிசியோ’ (N PHYSIO) என்ற செயலியை மதுரையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட்கள் அறிமுகப்படுத்த உள்ளனர். இதுகுறித்து ‘என் பிசியோ’ செயலி ஒருங்கிணைப்பாளர் வெ.கிருஷ்ணகுமார் கூறுகையில், பெண்கள், முதியோர்களின் உடல் இயக்க பயிற்சிகள் தொடர்பாக ஆன்லைன் மூலம் ஆலோசனை பெற்று பயன்பெறும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற செல்வதற்கான கால விரயம், பண விரயம் தவிர்க்கப்படும். ‘என் பிசியோ’ செயலி அறிமுக விழா மதுரையில் ஜூன் 4-ம் தேதி […]

எங்கிருந்தாலும் ஆலோசனை பெற வசதியாக ‘என் பிசியோ’ (N PHYSIO) என்ற செயலியை மதுரையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட்கள் அறிமுகப்படுத்த உள்ளனர்.

இதுகுறித்து ‘என் பிசியோ’ செயலி ஒருங்கிணைப்பாளர் வெ.கிருஷ்ணகுமார் கூறுகையில், பெண்கள், முதியோர்களின் உடல் இயக்க பயிற்சிகள் தொடர்பாக ஆன்லைன் மூலம் ஆலோசனை பெற்று பயன்பெறும் வகையில் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனைகளுக்கு சிகிச்சை பெற செல்வதற்கான கால விரயம், பண விரயம் தவிர்க்கப்படும். ‘என் பிசியோ’ செயலி அறிமுக விழா மதுரையில் ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது. சில நாட்களில் இது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu