வாகன சார்ஜிங் வசதிக்காக 'ரூபே கார்டு' அறிமுகம்

December 31, 2022

வாகன சார்ஜிங் வசதிக்காக 'ரூபே கார்டு' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பார்டம் சார்ஜ் மற்றும் டிரைவ் என்ற சார்ஜிங் நிலைய நிறுவனம் 'பைன் லேப்ஸ்' எனும் நிதி நிறுவனத்துடன் இணைந்து வாகன சார்ஜிங் வசதிக்காக புதிய 'ரூபே ப்ரீபெய்டு' கார்டை வெளியிட்டுள்ளது. இந்த கார்டை இந்தியா முழுதும் உள்ள அனைத்து சார்ஜிங் நிலையங்களிலும் ஜனவரி 1ம் தேதி முதல் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பார்டம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அவதேஷ் குமார் ஜா கூறுகையில், மின்சார […]

வாகன சார்ஜிங் வசதிக்காக 'ரூபே கார்டு' அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பார்டம் சார்ஜ் மற்றும் டிரைவ் என்ற சார்ஜிங் நிலைய நிறுவனம் 'பைன் லேப்ஸ்' எனும் நிதி நிறுவனத்துடன் இணைந்து வாகன சார்ஜிங் வசதிக்காக புதிய 'ரூபே ப்ரீபெய்டு' கார்டை வெளியிட்டுள்ளது. இந்த கார்டை இந்தியா முழுதும் உள்ள அனைத்து சார்ஜிங் நிலையங்களிலும் ஜனவரி 1ம் தேதி முதல் பயன்படுத்தலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து பார்டம் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அவதேஷ் குமார் ஜா கூறுகையில், மின்சார வாகன வாடிக்கையாளர்கள் இந்த ப்ரீபெய்டு கார்டை சார்ஜிங் நிலையங்களில் மட்டுமல்லாமல் மால்கள், கடைகள், உணவகங்கள் என பல்வேறு பொது இடங்களிலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த கட்டண முறை மிகச் சிறந்த சார்ஜிங் அனுபவத்தை கொடுக்கும் என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu