ஸ்மார்ட் காவலர் 'இ - பீட்' செயலி அறிமுகம்

October 17, 2022

பணியில் இருக்கும் போலீசாரை கண்காணிக்க, 'இ - பீட்' என்ற மொபைல் போன் செயலியை டி.ஜி.பி., சைலேந்திரபாபு அறிமுகம் செய்தார். தமிழக காவல் துறையில் பணிபுரியும் போலீசாரை கண்காணிக்கவும், அவர்கள் ரோந்து செல்லும்போது ஏற்படும் சம்பவங்கள், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தேவைப்படும் உதவிகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும், காவல் துறையில் 'இ - பீட்' என்ற மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று அறிமுகம் செய்தார். இந்த மொபைல் போன் […]

பணியில் இருக்கும் போலீசாரை கண்காணிக்க, 'இ - பீட்' என்ற மொபைல் போன் செயலியை டி.ஜி.பி., சைலேந்திரபாபு அறிமுகம் செய்தார்.

தமிழக காவல் துறையில் பணிபுரியும் போலீசாரை கண்காணிக்கவும், அவர்கள் ரோந்து செல்லும்போது ஏற்படும் சம்பவங்கள், அவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் மற்றும் தேவைப்படும் உதவிகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கவும், காவல் துறையில் 'இ - பீட்' என்ற மொபைல் போன் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு நேற்று அறிமுகம் செய்தார்.

இந்த மொபைல் போன் செயலி காவல் துறையின் செயல் திறனை மேம்படுத்தவும், குற்ற ஆவணங்களை துல்லியமாக பதிவு செய்யவும் உதவும். இந்த செயலிக்கு 'ஸ்மார்ட் காவலர்' என பெயர் சூட்டப்பட்டு உள்ளதாக காவல் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu