டுவிட்டரில் வீடியோ கால், ஆடியோ கால் வசதியை அந்நிறுவனம் கொண்டு வருகிறது.
செல்போன் நம்பர் இல்லாமல் ஆடியோ, வீடியோ காலில் பேசும் வசதியை டுவிட்டர் கொண்டு வருகிறது. சோதனை அடிப்படையில் டுவிட்டர் செயலியில் புதிய வசதியை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இதனால் பயனாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.