தரமான உணவை உறுதி செய்ய இணையதளம், செல்போன் செயலி அறிமுகம்

மக்களுக்கு தரமான உணவை உறுதி செய்ய இணையதளம், செல்போன் செயலியை உணவு பாதுகாப்புத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களைத் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார்கள் பெறப்பட்டு 72 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலியான TN Food Safety Consumer […]

மக்களுக்கு தரமான உணவை உறுதி செய்ய இணையதளம், செல்போன் செயலியை உணவு பாதுகாப்புத் துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் உணவின் தரம் குறித்து நுகர்வோர் புகார்களைத் தெரிவிக்க 9444042322 என்ற வாட்ஸ்அப் எண் மற்றும் unavupukar@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் புகார்கள் பெறப்பட்டு 72 மணி நேரத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது foodsafety.tn.gov.in என்ற இணையதளம் மற்றும் கைபேசி செயலியான TN Food Safety Consumer App அறிமுகப்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்த இணையதளம், எளிய முறையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளிலும், மாற்றுத் திறனாளிகளும் பயன்படுத்தும் வகையில் ஸ்க்ரீன் ரீடர் வசதிகளுடனும் உருவாக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உணவு பாதுகாப்புதுறையால் உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதளம் மற்றும் நுகர்வோர் குறைதீர்ப்பு செயலி ஆகிய சேவைகளை பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu