மகளிருக்கான 'மேன்மை சேமிப்பு பத்திரம்' - அஞ்சலகங்களில் அறிமுகம்

April 13, 2023

மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, ‘மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் 2023’ என்ற சேமிப்பு திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தத் திட்டம் தமிழகத்தின் அனைத்து அஞ்சலகங்களிலும் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் அதிக பலம் தரும் இந்த திட்டத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஒரு கணக்கு தொடங்கி 3 மாதங்கள் கழித்து அடுத்த கணக்கை தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக […]

மகளிர் மற்றும் பெண் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக, ‘மகளிர் மேன்மை சேமிப்பு பத்திரம் 2023’ என்ற சேமிப்பு திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது இந்தத் திட்டம் தமிழகத்தின் அனைத்து அஞ்சலகங்களிலும் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலத்தில் அதிக பலம் தரும் இந்த திட்டத்தில், பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் எத்தனை கணக்குகள் வேண்டுமானாலும் தொடங்கலாம் என கூறப்பட்டுள்ளது. ஒரு கணக்கு தொடங்கி 3 மாதங்கள் கழித்து அடுத்த கணக்கை தொடங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சமாக 1000 ரூபாய் முதல், அதிகபட்சமாக 2 லட்சம் ரூபாய் வரை செலுத்தி, கணக்கு தொடங்கலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 7.5% கூட்டு வட்டி வழங்கப்படும் என சொல்லப்பட்டுள்ளது. ஓராண்டு கழிந்த பின்னர், வைப்புத் தொகையின் 40% பணத்தை எடுக்கலாம் என்றும், கணக்கு தொடங்கி 6 மாதங்களுக்குள் முதிர்வு செய்தால் 5.5% மட்டுமே வட்டி கிடைக்கும் என்றும், சொல்லப்பட்டுள்ளது. மேலும், 2025 மார்ச் மாதம் வரையில் மட்டுமே இந்த திட்டம் நடைமுறையில் இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu