பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் ஸ்மார்ட் மோதிரம் - சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் கண்டுபிடிப்பு

September 1, 2023

பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் மோதிரத்தை, சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஸ்மார்ட் மோதிரம், வரும் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. முன்னதாக, செப்டம்பர் 27 ஆம் தேதி முதல், ஸ்மார்ட் மோதிரத்தின் சர்வதேச விற்பனை தொடங்கப்படுகிறது. சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் 'மியூஸ் வியரபில்' என்ற புத்தாக்க நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம், ஏற்கனவே, ஸ்மார்ட் வாட்ச் வடிவமைத்து, விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. […]

பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வசதியுடன் கூடிய ஸ்மார்ட் மோதிரத்தை, சென்னை ஐஐடி முன்னாள் மாணவர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஸ்மார்ட் மோதிரம், வரும் அக்டோபர் 25 ஆம் தேதி முதல் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது. முன்னதாக, செப்டம்பர் 27 ஆம் தேதி முதல், ஸ்மார்ட் மோதிரத்தின் சர்வதேச விற்பனை தொடங்கப்படுகிறது.

சென்னை ஐஐடியின் முன்னாள் மாணவர்கள் 'மியூஸ் வியரபில்' என்ற புத்தாக்க நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்த நிறுவனம், ஏற்கனவே, ஸ்மார்ட் வாட்ச் வடிவமைத்து, விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியா உள்ளிட்ட 30 உலக நாடுகளில் இந்த நிறுவனத்தின் ஸ்மார்ட் வாட்ச் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் அடுத்த கட்ட முயற்சியாக, ஸ்மார்ட் ரிங் எனப்படும் ஸ்மார்ட் மோதிரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, ஸ்மார்ட் வாட்ச்சில் இடம்பெறும் அனைத்து உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட அளவீடுகளும், இந்த ஸ்மார்ட் மோதிரத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இது வாட்சை விட 10 மடங்கு எடை குறைவானதாகும். மேலும், ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு வாரம் வரையில் நீடித்து நிற்கும் என சொல்லப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வாட்ச் அம்சங்களுடன் சேர்த்து, பண பரிவர்த்தனை சார்ந்த அம்சங்களும் ஸ்மார்ட் மோதிரத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக, மாஸ்டர் கார்டு, விசா, ரூபே போன்ற நிறுவனங்களுடன், மியூஸ் வியரபில் நிறுவனம் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் மோதிர திட்டம், மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu