ஜீ (Zee Entertainment) நிறுவனத்தின் 5.51% பங்குகளை 169.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு இன்வெஸ்கோ விற்க உள்ளது.
Invesco Developing Markets Fund ஆனது Zee Entertainment ல் உள்ள அதன் 5.51% பங்குகளை ஒப்பந்த அடிப்படையில் 169.5 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு விற்க முடிவு செய்துள்ளது.
30 ஜூன், 2022 அன்று வரை ஜீ என்டர்டெயின்மென்ட்டில் 10.14 சதவீதமாக இ௫ந்த இன்வெஸ்கோவின் பங்கு இந்த ஒப்பந்தத்தின் மூலம் பாதிக்கும் மேல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
52.93 மில்லியன் பங்குகளின் விற்பனையானது ஒரு ஈக்விட்டி பங்கிற்கு ரூ.250 முதல் ரூ.263.7 வரை இருக்கும். இந்த விற்பனையானது 0 முதல் 5.2 சதவீதம் வரை தள்ளுபடி ஆகி 263.70க்கு இறுதியாகும். இதன்மூலம் இன்வெஸ்கோ பெறும் பங்கு விற்பனையின் குறைந்தபட்ச மதிப்பு 169.5 மில்லியன் டாலர் அல்லது ரூ 1,323.4 கோடி ஆகும். அதிகபட்சமாக 169.5 மில்லியன் அமெரிக்க டாலர் அல்லது ரூ. 1,395.9 கோடி கிடைக்கும்.
கோடக் செக்யூரிட்டீஸ் இந்த வர்த்தகத்திற்கான தரகராக செயல்படுகிறது.