இந்தியாவில், மைக்ரோசாப்ட் டீம்ஸ், அவுட்லுக் முடக்கம்

January 25, 2023

இன்று, இந்தியாவில், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் மற்றும் அவுட்லுக் செயல்பாடுகளில் முடக்கம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 3700 புகார்கள் இது தொடர்பாக குவிந்துள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மேலும், இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த மைக்ரோசாப்ட், "இணைய சேவையில் முக்கிய பிரச்சனை எழுந்துள்ளது. அது குறித்து ஆராய்ச்சி செய்து, அதற்கான தீர்வுகளை கண்டறிய முயன்று வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த முடக்கம் தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன. குறிப்பாக, 'மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் செயல்படவில்லை என்பதால் வேறு வேலை […]

இன்று, இந்தியாவில், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் மற்றும் அவுட்லுக் செயல்பாடுகளில் முடக்கம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 3700 புகார்கள் இது தொடர்பாக குவிந்துள்ளதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது. மேலும், இதற்கு ட்விட்டரில் பதில் அளித்த மைக்ரோசாப்ட், "இணைய சேவையில் முக்கிய பிரச்சனை எழுந்துள்ளது. அது குறித்து ஆராய்ச்சி செய்து, அதற்கான தீர்வுகளை கண்டறிய முயன்று வருகிறோம்" என்று தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த முடக்கம் தொடர்பான மீம்ஸ்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமிக்க தொடங்கியுள்ளன.

குறிப்பாக, 'மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் செயல்படவில்லை என்பதால் வேறு வேலை தேட போகிறேன்' என்பது போன்ற மீம்ஸ்கள் பரவத் தொடங்கியுள்ளன. மேலும், டீம்ஸ் மற்றும் அவுட்லுக் முடக்கம் காரணமாக, விடுமுறைகள் தொடங்கியுள்ளதாகவும் நகைச்சுவை மீம்ஸ்கள் வேகமாக பகிரப்பட்டு வருகின்றன. இதற்கு முன்னதாக, கடந்த ஜூலை மாதத்தில், இதே போன்று, மைக்ரோசாப்ட் டீம்ஸ் முடங்கியது குறிப்பிடத்தக்கது. அப்போதைய நிகழ்விலும் ஆயிரக்கணக்கான பயனர்கள் பாதிக்கப்பட்டனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu