பிரபல தொழில் அதிபர் ராஜ் குந்த்ரா வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
பிரபல இந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரும், தொழில் அதிபருமான ராஜ் குந்த்ரா கடந்த 2021-ஆம் ஆண்டு ஆபாச படங்கள் தயாரித்து அதை மொபைல் செயலியில் பதிவிறக்கம் செய்த குற்றத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது, அவர் ஜாமினில் உள்ளார்.
இந்த நிலையில், ராஜ் குந்த்ரா மீதான பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இன்று மும்பை உள்ளிட்ட இடங்களில் அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 15 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த முக்கிய நபர்களுடன் தொடர்புடைய சில வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது.