பங்குச்சந்தை வீழ்ச்சி - சென்செக்ஸ் 900 புள்ளிகள் சரிவு

October 26, 2023

இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ளதால், சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய பங்குச் சந்தையில், கடந்த 5 நாட்களில் 14.6 லட்சம் கோடி அளவில் இழப்பு நேரிட்டுள்ளது. மேலும், பங்குகளின் மதிப்பு சராசரியாக 3.5% சரிவை சந்தித்துள்ளது.இந்த நிலையில், இன்றும் மிகப்பெரிய சரிவை பங்குச்சந்தை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 900.91 புள்ளிகள் சரிந்து, 63148.15 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், […]

இஸ்ரேல் போர் தீவிரமடைந்துள்ளதால், சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் கடும் வீழ்ச்சி காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்திய பங்குச் சந்தையில், கடந்த 5 நாட்களில் 14.6 லட்சம் கோடி அளவில் இழப்பு நேரிட்டுள்ளது. மேலும், பங்குகளின் மதிப்பு சராசரியாக 3.5% சரிவை சந்தித்துள்ளது.இந்த நிலையில், இன்றும் மிகப்பெரிய சரிவை பங்குச்சந்தை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 900.91 புள்ளிகள் சரிந்து, 63148.15 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 264.91 புள்ளிகள் சரிந்து 18857.25 புள்ளிகளில் நிறைவு பெற்றுள்ளது.
இன்றைய வர்த்தகத்தில், ஆக்சிஸ் வங்கி, ஐடிசி, இண்டஸ் இண்ட் வங்கி, ஹெச் சி எல் டெக், அதானி போர்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன. அதே சமயத்தில், மஹிந்திரா, பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், யு பி எல், டைட்டன், நெஸ்லே, டாடா ஸ்டீல், ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ரிலையன்ஸ், கோட்டக் வங்கி போன்ற வணிக நிறுவனங்கள் சரிவை சந்தித்துள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu