காசநோய் கண்டறியும் கருவிகளை ரூபாய் 28 கோடியில் வழங்க தமிழக அரசுடன் ஐஓசி புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரதமரின் முயற்சியால் உருவான டிபி முகத் பாரத் அபியான் திட்டத்தை ஆதரிக்கும் வகையில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், சட்டீஸ்கர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் காசநோய் கண்டறியும் இயந்திரங்கள் வழங்கப்பட்டு காச நோய்க்கு எதிர்த்து நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்தியன் ஆயில் நிறுவனம் சமூக மேம்பாடு மேலாண்மை திட்டத்தின் மூலம் தமிழக அரசுடன் 28 கோடி ரூபாய் மதிப்பிலான காசநோய் கண்டறியும் கருவிகளை வழங்குவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இந்த முயற்சியில் இந்தியன் ஆயில் நிறுவனம் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களின் பயன்பாட்டிற்காக 192 காச நோய் கண்டறியும் இயந்திரங்களை வழங்குவதாக ஒப்பந்தம் இடப்பட்டுள்ளது.