ஐபோன் உற்பத்திக்காக உத்தரபிரதேசத்தில் 2800 கோடி முதலீடு

December 23, 2022

ஆப்பிள் நிறுவனம், ஐபோன் உற்பத்தியின் பெரும்பகுதியை இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தின் யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் அருண் வீர் சிங், ஆப்பிள் சப்ளையர்கள், உத்தரப்பிரதேசத்தில் 2800 கோடி ரூபாய் முதலீடு செய்து, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும், இதற்காக நிலங்களை கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சுமார் 23 ஏக்கர் நிலப்பரப்பில், 2800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆப்பிள் சப்ளையர்கள், உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் […]

ஆப்பிள் நிறுவனம், ஐபோன் உற்பத்தியின் பெரும்பகுதியை இந்தியாவிற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், உத்தரப்பிரதேசத்தின் யமுனா எக்ஸ்பிரஸ்வே தொழில் மேம்பாட்டு அமைப்பின் தலைவர் அருண் வீர் சிங், ஆப்பிள் சப்ளையர்கள், உத்தரப்பிரதேசத்தில் 2800 கோடி ரூபாய் முதலீடு செய்து, ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளதாக கூறியுள்ளார். மேலும், இதற்காக நிலங்களை கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சுமார் 23 ஏக்கர் நிலப்பரப்பில், 2800 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆப்பிள் சப்ளையர்கள், உற்பத்தி நிலையம் ஒன்றை அமைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் அண்மையில் நடந்த சந்திப்பில் இதனை ஆப்பிள் சப்ளையர்கள் தெரிவித்ததாக அருண் வீர் சிங் கூறியுள்ளார். குறிப்பாக, ஐபோன் 16 மாடல்கள் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் தயாரிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu