அமெரிக்காவில் உள்ள யூட்டா வனப்பகுதியில், 3 மாணவர்கள் சிக்கி உள்ளனர். அவர்களை மீட்பதற்கு ஐபோன் 14 போனில் இடம்பெற்றுள்ள நவீன அம்சம் உதவியுள்ளது.
அடர்ந்த வனப்பகுதிக்குள் மாணவர்கள் சென்ற போது, வெப்பநிலை குறைந்ததால், இரு மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் மொபைல் நெட்வொர்க் இணைப்பு கிடைக்கவில்லை. எனவே, அவர்களால் உதவி வேண்டி யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அவர்கள் வைத்திருந்த ஐபோன் 14 கைப்பேசியில் உள்ள சாட்டிலைட் இணைப்பு மூலம், அவசர உதவியை கோரும் எஸ் ஓ எஸ் அம்சத்தை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். எஸ் ஓ எஸ் மூலம் அமெரிக்காவின் அவசர எண்ணான 911 எண்ணுக்கு உதவி வேண்டி குறுஞ்செய்தி அனுப்ப, மீட்பு குழுவினரால் அவர்கள் மீட்கப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் அவர்கள் மீட்கப்பட்டுள்ள செய்தி, தற்போது இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.