பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
ஐபிஎல் தொடரின் பரபரப்பான போட்டியில், பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க வீரராக வந்த பிரியான்ஷ் ஆர்யா அரை சதம் அடித்தார், மற்றவர்கள் தொடர்ந்து அவுட் ஆனதால் 83/5 என பதட்டம் ஏற்பட்டது. ஆனால், ஆர்யா – ஷஷாங்க் சிங் ஜோடி அதிரடியாக விளையாடி பஞ்சாப் அணிக்கு 219 ரன்கள் குவித்தது.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில், கான்வே 69, துபே 42, ராசின் 36, டோனி 27 என சிறந்த ஆட்டம் இருந்தும், 20 ஓவர்களில் 201 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.இதனால் பஞ்சாப் 3வது வெற்றியை பதிவு செய்து, 6 புள்ளிகளுடன் முன்னேறியது.