கடந்த மே மாதம் நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில், விளம்பரங்கள் வாயிலாக மட்டுமே 10000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. அதில் 65% வருவாயை, பிசிசிஐ, ஒவ்வொரு அணியின் உரிமையாளர்கள் மற்றும் போட்டி ஒளிபரப்பு நிறுவனங்கள் ஆகியவை பெற்றுள்ளன. குறிப்பாக, ஒளிபரப்பு தளங்களான ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஜியோ சினிமா ஆகியவை 4700 கோடி ரூபாய் பெற்றுள்ளன. பிசிசிஐ 420 கோடி ஈட்டி உள்ளது.
இவை தவிர, ஐபிஎல் போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது, பல்வேறு பேண்டஸி கேமிங் செயலிகளும் அதை ஒட்டி இயங்கின. இந்த செயலிகள், கிட்டத்தட்ட 2800 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டி உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 61 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த தளங்களை ஐபிஎல் போட்டியின் போது பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.