ஐபிஎல் 2024 கிரிக்கெட் போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய சென்னை அணியின் கேப்டன் ருத்விக் 54 பந்துகளில் 98 ரன்களை குவித்தார். போட்டியின் முடிவில் சென்னை அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து களம் இறங்கிய ஹைதராபாத் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதன் காரணமாக 18.5 அவர்கள் 134 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகள் இழப்பிற்கு ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. அதன் மூலம் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.