ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு இரண்டாவது அணியாக ஹைதராபாத் அணி முன்னேறியுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரில் குவாலிபயர்-2 போட்டி நடைபெற்றது. இதில் ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதியது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்தது. இதனை தொடர்ந்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணியின் வீரர்கள் தொடர்ந்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் ஏழு விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து ஹைதராபாத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஹைதராபாத் அணி இரண்டாவது அணியாக இறுதிபோட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன














