ஐபிஎல் தொடரின் 23 வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 23ஆவது லீக் ஆட்டம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. இதில் பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹைதராபாத் அணி ஆட்டத்தின் இறுதியில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணியின் வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் இறுதியில் இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.