ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 67-வது லீக் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 67-வது லீக்காட்டம் மும்பை மற்றும் லக்னோ அணிகள் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களம் இறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. இதனைத் தொடர்ந்து மும்பை அணி களம் இறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக வந்த ரோகித் சர்மா - டெவால்ட் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 88 ரன்கள் சேர்த்தது. பின்னர் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 196 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் லக்னோ அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது