ஐபிஎல் தொடரில் 15வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 15 ஆவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன் அடிப்படையில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் எடுத்தது. இதில் டிகாக் அதிகபட்சமாக 81 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் விளையாடிய ஆர்.சி.பி அணியின் தொடக்க வீரர்களாக களம் இறங்கிய விராட் கோலி 22 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து வந்த வீரர்கள் அடுத்து அடுத்து சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். இறுதியில் 19.4 ஓவர் முடிவில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனை தொடர்ந்து லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவரை ஆர்சிபி அணி தொடர்ந்து மூன்று போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது .லக்னோ அணை 2 வெற்றி பெற்றுள்ளது.