ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணி தோல்வியடைந்தது.
ஐபிஎல் தொடரின் நேற்றைய எலிமினேட்டர் சுற்று -1ல் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஸ்வால் மற்றும் டாம் ஹோக்லர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனை அடுத்து 19-வது ஓவரில் ஆறு விக்கெட்டுகளை இழந்த ராஜஸ்தான் அணி 174 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது