ஐ.பி.எல். 2025: ராஜஸ்தான் ராயல்ஸ் 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி

ஐ.பி.எல். 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது. ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக 81 ரன்கள் குவித்தார். சிஎஸ்கே சார்பில் […]

ஐ.பி.எல். 2025 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியது.

ஐ.பி.எல். 2025 சீசனின் 11-வது லீக் போட்டி நேற்று கவுகாத்தியில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற சிஎஸ்கே பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. நிதிஷ் ரானா அதிரடியாக 81 ரன்கள் குவித்தார். சிஎஸ்கே சார்பில் கலீல் அகமது, நூர் அகமது, பதிரனா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது. இறுதியில் சிஎஸ்கே 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இந்த நிலையில், 6 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றது. ராஜஸ்தான் சார்பில் ஹசரங்கா 4 விக்கெட் வீழ்த்தினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu