ராம நவமியால் ஐபிஎல் தொடரின் இரண்டு போட்டிகளில் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரின் 17 ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதற்கு அடுத்த இடங்களில் கொல்கத்தா, சென்னை, குஜராத் ஆகியவை உள்ளன. இந்நிலையில் ஐபிஎல் தொடரின் இரண்டு போட்டிகள் ராம நவமியால் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற இருந்த கொல்கத்தா- ராஜஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஏப்ரல் 16ஆம் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற இருந்த குஜராத் டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி ஏப்ரல் 17ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.