பிரபல துரித வர்த்தக நிறுவனமான ஜெப்டோ, புதிய முதலீட்டாளர்களிடம் இருந்து சிக்ஸ் 665 மில்லியன் டாலர்கள் நிதியை திரட்டி உள்ளது. சில தனியார் பொதுத்துறை நிறுவனங்களும் ஜெப்டோ நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளன. இந்த நிலையில், ஜெப்டோ நிறுவனம் விரைவில் ஐபிஓ வெளியிடலாம் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் சந்தை மதிப்பு 3.6 பில்லியன் டாலர்கள் அளவில் இரட்டிப்பு மடங்கு உயர்வடையும் என கருதப்படுகிறது.
ஜெப்டோ துரித வர்த்தக தளம் மூலம் ஆண்டுக்கு ஒரு பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள சரக்குகள் வர்த்தகம் ஆகின்றன. எனவே, வர்த்தகத்தை மேலும் அதிகரிக்க ஜெப்டோ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நிறுவனத்தின் வேர்ஹவுஸ் எண்ணிக்கைகளை வரும் 2025 மார்ச் மாதத்திற்குள் 700க்கும் அதிகமாக உயர்த்த திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. விரைவில் ஐ பி ஓ குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.