தகுதியற்ற விமானிகளை வைத்து விமானங்களை இயக்கியதற்காக ஏர் இந்தியாவுக்கு விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) கடும் அபராதம் விதித்துள்ளது. குறிப்பாக, ஏர் இந்தியாவுக்கு ₹98 லட்சம் அபராதமும், அதன் செயல்பாட்டு இயக்குநர் மற்றும் பயிற்சி இயக்குனருக்கு முறையே ₹6 லட்சம் மற்றும் ₹3 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை 10 அன்று ஏர் இந்தியா தானாகவே விதிமீறல் பற்றி புகாரளித்தது. இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பல ஒழுங்குமுறை மீறல்கள் கண்டறியப்பட்டன. குறிப்பிட்ட விதிமீறல் சம்பவத்தில், பயிற்சியாளர் அல்லாத கேப்டன் ஒருவர் விமானத்தை இயக்கியுள்ளார். மேலும், அவருடன் இருந்த அதிகாரி, லைன்-ரிலீஸ் செய்யப்படாதவர். இது DGCA-வால் தீவிர பாதுகாப்பு பிரச்சினையாக கருதப்படுகிறது.