ஈரான் நாட்டில், அதிக எண்ணிக்கையில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2023 ஆம் ஆண்டில் மட்டும், இதுவரை 354 பேர் மரண தண்டனை பெற்றுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 36% உயர்வு என கூறப்படுகிறது. உலக அளவில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்புகள், ஈரான் நாட்டுக்கு இது தொடர்பாக கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றன.
கடந்த 2022 ஆம் ஆண்டில், ஈரான் நாட்டில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு, அதிக எண்ணிக்கையில் மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில், 2023 ஆம் ஆண்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் 20% பேர் சன்னி பாலுச் என்ற சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என கூறப்பட்டுள்ளது. அத்துடன், போதைப்பொருள் குற்ற வழக்கில் ஈடுபட்டவர்களுக்கு அதிகமான மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 126% கூடுதலாக போதை குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இந்த செய்தி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.