ரஷ்யாவின் சுகோய் போர் விமானங்களை ஈரான் வாங்க உள்ளது.
சுகோய் சு 35 ரக போர் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் ஆகியவற்றை ரஷ்யாவிடம் இருந்து வாங்க ஈரான் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. ஈரானின் விமானப்படையில் குறைவான எண்ணிக்கையிலான போர் விமானங்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. பெரும்பாலானவை பழைய விமானங்கள் என கூறப்படுகிறது. எனவே, ஈரானின் ராணுவத்துக்கு பலம் அதிகரிக்கும் வகையில், புதிய போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அந்நாட்டின் இணை பாதுகாப்பு அமைச்சர் மேத்தி பராஹி தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் ரஷ்யா இடையே ராணுவ உறவு நெருக்கம் அடைந்துள்ள நிலையில், இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்படுகிறது.