காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் இஸ்ரேல் மீது பல்முனை தாக்குதல் நடக்கும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா அமைப்பினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த அமைப்பினர் லெபனான் எல்லையில் இருந்து செயல்படுகின்றனர். இந்த தாக்குதல்கள் குறித்து இஸ்ரேல் ராணுவம் தெரிவித்ததாவது, நாங்கள் காசாவில் இருந்து ஹமாஸ் அமைப்பினரை ஒழிக்க பாடுபட்டு வருகிறோம். அனால் ஹிஸ்புல்லா அமைப்பினர் திசை திருப்புகின்றனர். அவர்கள் எல்லையில் தொடர்ந்து துப்பாக்கி சூடு சம்பவம் நடத்தி வருகின்றனர். இவர்கள் ஈரான் நாட்டின் தூண்டுதல் பேரிலேயே இப்படி செயல்படுகின்றனர். இவ்வாறு இஸ்ரேல் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.
காசா மீது தொடர்ந்து இஸ்ரேல் போர் தொடுக்குமானால் பல்வேறு முனைகளில் இருந்து ஈரான் இஸ்ரேலை தாக்கும் என்று ஈரான் வெளியுறவு துறை அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதனை அடுத்து இஸ்ரேல் லெபனான் எல்லையில் ஹிஸ்புல்லா படைகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.