ஒலியை விட 5 மடங்கு வேகமாகச் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை - ஈரான் அறிமுகம்

June 7, 2023

ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஈரான் அறிமுகம் செய்துள்ளது. ஃபட்டா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை, 1400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபட்டா என்பதற்கு, ‘எதிரிகளின் நிலங்களை வெல்பவர்’ என்று பொருளாகும். இந்த ஏவுகணையை, வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் இடைமறித்து அழிக்க முடியாது என்று ஈரான் தெரிவித்துள்ளது. முன்னதாக, கடந்த மாதமும், கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனையை ஈரான் […]

ஒலியை விட 5 மடங்கு வேகமாக செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை ஈரான் அறிமுகம் செய்துள்ளது. ஃபட்டா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஏவுகணை, 1400 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளையும் துல்லியமாக தாக்கி அழிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபட்டா என்பதற்கு, ‘எதிரிகளின் நிலங்களை வெல்பவர்’ என்று பொருளாகும். இந்த ஏவுகணையை, வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் இடைமறித்து அழிக்க முடியாது என்று ஈரான் தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த மாதமும், கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை சோதனையை ஈரான் வெற்றிகரமாக செய்து முடித்தது. ஈரான் நாடு, இஸ்ரேலுக்கு எதிராக, பாலஸ்தீனர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. எனவே, ஈரானின் தற்போதைய ஹைப்பர்சோனிக் ஏவுகணை இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. அதே வேளையில், அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ அது நவீன வான் பாதுகாப்பு ஏவுகணைகளால் ஃபட்டா ஏவுகணையை ஊகிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2024 தமிழ்க்களம்
envelopecrossmenu