ஈரான் அதிபர் இப்ராஹிம் ராய்சி பாகிஸ்தான் வருகை

April 22, 2024

ஈரான் அதிபர் இப்ராஹிம் ராய்சி மூன்று நாள் பயணமாக இன்று பாகிஸ்தான் வருகை தந்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழலுக்கு மத்தியில் அவரது பாகிஸ்தான் வருகை உலக அளவில் கூர்ந்து நோக்கப்படுகிறது. ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு வான்வழி தாக்குதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தற்போது, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தாக்குதலில் களமிறங்கியுள்ளது. இத்தகைய பதற்ற சூழலில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ராய்சி பாகிஸ்தான் வருகை தந்துள்ளார். அவருடன் அவரது […]

ஈரான் அதிபர் இப்ராஹிம் ராய்சி மூன்று நாள் பயணமாக இன்று பாகிஸ்தான் வருகை தந்துள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழலுக்கு மத்தியில் அவரது பாகிஸ்தான் வருகை உலக அளவில் கூர்ந்து நோக்கப்படுகிறது.

ஈரான் மற்றும் பாகிஸ்தான் இடையே கடந்த சில வாரங்களுக்கு முன்பு வான்வழி தாக்குதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, தற்போது, இஸ்ரேலுக்கு எதிராக ஈரான் தாக்குதலில் களமிறங்கியுள்ளது. இத்தகைய பதற்ற சூழலில், ஈரான் அதிபர் இப்ராஹிம் ராய்சி பாகிஸ்தான் வருகை தந்துள்ளார். அவருடன் அவரது மனைவி, ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் பாகிஸ்தான் வந்துள்ளனர். பாகிஸ்தானில், அதிபர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பிரதமர் சபாஷ் ஷரீஃப் ஆகியோரை நேரில் சந்தித்து இப்ராஹிம் ராய்சி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த சந்திப்புகள் மூலம், இருநாட்டுகளுக்கு இடையில் இருக்கும் பிளவு நீங்கும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu