ஈரானில் ஜூலை 5ஆம் தேதி இரண்டாம் கட்ட அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி கடந்த மாதம் ஹெலிகாப்டர் விபத்தில் பலியானார். இதைத் தொடர்ந்து ஈரானில் புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 2.45 கோடி வாக்குகள் பதிவாகியுள்ளது.
இந்த தேர்தலில் போட்டியிட்ட மசூர் பெசஸ்கியன் 1.4 கோடி வாக்குகளை பெற்றுள்ளார். சையது ஜலீலி 90.4 லட்சம் வாக்குகள், முகமது பாகேர் 30.3 இலட்சம் வாக்குகள், முஸ்தபா முகமது 2.06 வாக்குகளை பெற்றுள்ளனர். ஈரான் நாட்டின் சட்டப்படி அதிபர் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் ஒட்டுமொத்த வாக்குகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும். அவ்வாறு பெறாவிட்டால் முதல் இரண்டு இடங்களில் உள்ள வேட்பாளர்களுக்கு இடையே இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்படும். அந்த வகையில் தற்போது அதிகபட்ச வாக்குகளை பெற்ற முதல் இரண்டு இடங்களைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஜூலை 5ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. ஈரான் வரலாற்றில் இதற்கு முன்பு கடந்த 2005ஆம் ஆண்டு இதே போல் இரண்டாம் கட்ட அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது.