ஈரான் அதிபர் ராய்சி சென்ற ஹெலிகாப்டர் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்று விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து தொடர்பாக ஆயுதப்படை அதிகாரிகள் குழு விசாரணை நடத்தினர். அதன் முடிவில் விசாரணை அறிக்கை வெளியிடப்பட்டது. ஈரான அதிபர் ரைசி பயணித்த ஹெலிகாப்டர் மலையின் மீது மோதிய உடனே தீப்பிடித்து எரிந்தது. ஹெலிகாப்டர் மீது துப்பாக்கி தாக்குதல் எதுவும் நடத்தப்பட்டதாக ஆதாரம் கிடைக்கவில்லை. ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாவதற்கு முன்னர் விமானிகளுக்கும் கட்டுப்பாட்டு அறைக்கும் இடையே சந்தேகத்திற்கு இடமான வகையில் எந்த தகவலும் பரிமாறப்படவில்லை. அதோடு ஹெலிகாப்டர் விழுந்த பிறகு அதில் தீ பிடித்தது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அடுத்த கட்ட விசாரணையில் விபத்து தொடர்பான கூடுதலான தகவல்கள் தெரியவரும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.