அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்பை படுகொலை செய்ய ஈரான் சதி திட்டம் தீட்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டை அந்த நாடு மறுத்துள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு ஈரானின் துணை ராணுவ படை தளபதி காசிம் சுலைமானி அப்போதைய டிரம்ப் அரசின் உத்தரவால் ஆளில்லா விமானம் மூலம் படுகொலை செய்யப்பட்டார். இதற்கு பழிவாங்குவதற்காக அவரை கொல்ல ஈரான் திட்டமிட்டதாக ஈரான் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இந்த குற்றச்சாட்டிற்கு ஈரான் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் நாசர் கனானி கூறியிருப்பதாவது, சமீபத்தில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பை படுகொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் எங்கள் நாட்டுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். அதே சமயத்தில் காசிம் சுலைமானி படுகொலைக்கு பழி வாங்குவதற்காக நாங்கள் ட்ரம்பை படுகொலை செய்ய திட்டமிட்டதாக கூறப்படுவது தவறான தகவல் ஆகும். இந்த படுகொலையில் நேரடி தொடர்புடைய டிரம்பிற்கு எதிராக சட்டபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.