ஈரான் - மீண்டும் ஹிஜாப் கட்டுப்பாடுகள் அமல் - கண்காணிப்பு தீவிரம்

July 17, 2023

ஈரான் நாட்டில் மீண்டும் ஹிஜாப் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. ஹிஜாப் அணிவதை கண்காணிக்கும் காஸ்த் எர்ஷாத் என்ற சிறப்புப் பிரிவு காவல் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, முறையாக ஹிஜாப் அணியாத பெண்களை, ஹிஜாப் அணியக் கூறி கட்டளை இடுவர். அவர்களின் உத்தரவை ஏற்க மறுக்காத பெண்களை கைது செய்வர். கைது செய்யப்பட்டவர்கள் காவல் துறையால் நடத்தப்படும் கல்வி நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, முறையாக ஹிஜாப் அணிவது பற்றி பயிற்றுவிக்கப்படுவார்கள் […]

ஈரான் நாட்டில் மீண்டும் ஹிஜாப் கட்டுப்பாடுகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டுள்ளன. ஹிஜாப் அணிவதை கண்காணிக்கும் காஸ்த் எர்ஷாத் என்ற சிறப்புப் பிரிவு காவல் படையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். அவர்கள், ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது, முறையாக ஹிஜாப் அணியாத பெண்களை, ஹிஜாப் அணியக் கூறி கட்டளை இடுவர். அவர்களின் உத்தரவை ஏற்க மறுக்காத பெண்களை கைது செய்வர். கைது செய்யப்பட்டவர்கள் காவல் துறையால் நடத்தப்படும் கல்வி நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, முறையாக ஹிஜாப் அணிவது பற்றி பயிற்றுவிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம், ஈரானில், மாஷா அமினி என்ற பெண், முறையாக ஹிஜாப் அணியாத குற்றத்திற்காக தண்டிக்கப்பட்டார். காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட அவர் உயிரிழந்த நிலையில், ஈரான் நாட்டில் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. ‘ஹிஜாப் எதிர்ப்பு போராட்டம்’ உலக அளவில் கவனம் பெற்றது. எனினும், ஈரான் அரசு ஹிஜாப் கட்டுப்பாடுகளை நீண்ட நாட்களுக்கு தளர்த்தவில்லை. மேலும், 2023 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில், ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 354 பேர் தண்டிக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை தொடர்ந்து, தற்போது மீண்டும் ஹிஜாப் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu