ஈரான் நாடு, தொலை உணர்வு செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தியுள்ளது.
நூர் 3 என்று பெயரிடப்பட்டுள்ள தொலை உணர்வு செயற்கைக்கோள், பூமியில் இருந்து 450 கிலோமீட்டர் தொலைவில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. ஈரானின் தகவல் தொடர்பு துறை அமைச்சர் இசா ஜரேபூர் இந்த தகவலை தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளின் கண்டனங்களை மீறி ஈரான் பல்வேறு ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயற்கைக்கோளை நிலை நிறுத்தி இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனவே, இந்த செயற்கைக்கோள் நிலைநிறுத்தம், ஈரான் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான பதற்றத்தை அதிகரித்துள்ளது.