இஸ்ரேலுக்கு உளவு பார்த்ததாக கூறி நான்கு பேருக்கு ஈரான் நேற்று மரண தண்டனை நிறைவேற்றியது.
இஸ்ரேலை சேர்ந்த மொசாட் அமைப்பிற்கு உளவு பார்த்ததாக குற்றம் சாட்டி நான்கு பேரை நேற்று ஈரான் தூக்கிலிட்டது. இது குறித்து ஈரான் தொலைக்காட்சியில் கூறி இருப்பதாவது, இஸ்ரேலை சேர்ந்த மொசாட் அமைப்பிற்கு உளவு பார்த்ததற்காக நான்கு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இசபிஹான் நகரில் உள்ள தொழிற்சாலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு குண்டு வைத்த குற்றத்துக்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
இஸ்ரேலும், ஈரானும் தங்களது நாடுகளை வேவு பார்ப்பதாக பரஸ்பரம் குற்றம் சாட்டி வருகின்றன. பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவானது ஈரான் ஏற்கவில்லை. அதே சமயத்தில் ஈரான் அணு ஆயுதம் உருவாக்குவது ஆபத்து என்று இஸ்ரேல் குற்றம் சாட்டி வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே எப்போதும் பதற்ற சூழல் நிலவி வருகிறது. தூக்கிலிடப்பட்டவர்களின் பெயர்கள் முகமது பராமரிசி, மோஷன் மஸ்லூம், வாபா சார்பர், பேஜ்மெண் பாதேஹி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே உளவு அமைப்புக்காக பணியாற்றியதாக ஐந்து பேருக்கு ஈரான் கடந்த மாதம் தூக்கு தண்டனை நிறைவேற்றியது குறிப்பிடத்தக்கது.