இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா மீது ஈரான் பொருளாதார தடை

May 3, 2024

இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் இங்கிலாந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்த தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது ஈரான் பொருளாதார தடை விதித்துள்ளது. சமீபத்தில் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் காசா போர் குறித்து தொலைபேசியில் விவாதித்தார். கைதிகளையும் ஹமாஸ் அமைப்பின் பிடியில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கும் முயற்சிகள் மற்றும் போர் நிறுத்தம் குறித்து அவர்கள் விவாதம் செய்தனர். அதோடு காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேம்படுத்துவது குறித்தும் பேசப்பட்டதாக ஜெர்மனி […]

இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்படும் இங்கிலாந்து, அமெரிக்கா நாட்டை சேர்ந்த தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது ஈரான் பொருளாதார தடை விதித்துள்ளது.

சமீபத்தில் ஜெர்மனி அதிபர் ஓலாப் ஸ்கோல்ஸ் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவுடன் காசா போர் குறித்து தொலைபேசியில் விவாதித்தார். கைதிகளையும் ஹமாஸ் அமைப்பின் பிடியில் உள்ள அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவிக்கும் முயற்சிகள் மற்றும் போர் நிறுத்தம் குறித்து அவர்கள் விவாதம் செய்தனர். அதோடு காசா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை மேம்படுத்துவது குறித்தும் பேசப்பட்டதாக ஜெர்மனி அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், காசா போரில் இஸ்ரேலுக்கு ஆதரவாக செயல்பட்ட இங்கிலாந்து மற்றும் அமெரிக்க தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது ஈரான் பொருளாதார தடை அறிவித்துள்ளது. இங்கிலாந்து அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு அமெரிக்கர்கள் மற்றும் நிறுவனங்களை குறிவைத்து இந்த தடையை ஈரான் அரசு அறிவித்துள்ளது. இது குறித்து ஈரான் அரசு சார்பில் கூறப்படுவதாவது, ஈரான் வங்கிகளில் கணக்குகள் மற்றும் பரிவர்த்தனைகளை தடுப்பது, விசா வழங்குதல் மற்றும் ஈரானிய எல்லைக்குள் நுழைவதை தடுப்பது, ஈரானின் அதிகார வரம்பிற்குள் உள்ள சொத்துக்களை முடக்குவது போன்றவை இந்த தடையின் கீழ் அடங்கும் என்றுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu