ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்ததால் அந்த அலுவலகத்தை போலீசார் மூடி சீல் வைத்தனர்.
ஈரான் நாட்டில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது அவசியம் ஆகும். இது அந்நாட்டு அரசின் உத்தரவாகும். இதனை மீறுபவர்களுக்கு தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில், ஈரான் தலைநகர்
டெஹ்ரானில் உள்ள துருக்கி ஏர்லைன்ஸ் விமான நிறுவன அலுவலகத்தில் பணியாற்றும் ஈரான் நாட்டை சேர்ந்த பெண்கள் ஹிஜாப் அணியாமல் பணி செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது அங்கு பணியாற்றும் பெண் ஊழியர்கள் ஹிஜாப் அணியாமல் இருந்தது தெரிய வந்தது. உடனே அந்த அலுவலகத்தை போலீசார் மூடி சீல் வைத்தனர். இந்த சம்பவம் குறித்து துருக்கி ஏர்லைன்ஸ் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.