பூமிக்கு அடியில், ‘ஈகிள் 44’ என்ற பெயரில், ஈரான் அரசு விமானப் படைத்தளத்தை அமைத்துள்ளது. இதன் புகைப்படங்களை தற்போது ஈரான் வெளியிட்டுள்ளது. பூமிக்கு அடியில் உள்ள இந்த விமான தளத்தில், அனைத்து விதமான போர் விமானங்கள், ட்ரோன்கள் மற்றும் தொலைதூர ஏவுகணைகள் ஆகியவற்றை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதாள விமானப்படைத் தளத்தின் துல்லிய இருப்பிடம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், மலைகளுக்கு அடியில், சுமார் 1000 மீட்டர் ஆழத்தில் இது அமைந்திருப்பதாக கூறப்படுகிறது.
ஈரான் அரசு, தற்போது ஈகிள் 44 புகைப்படங்களை வெளியிட்டு இருப்பது, அதன் படை பலத்தை உலகிற்கு எடுத்துக்காட்டும் நிகழ்வாக கருதப்படுகிறது. முன்னதாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாட்டுடன் ஈரான் கூட்டுப் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், ஈரான் நாடு எதிரிகளால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்டால், இந்த பாதாள விமானப்படை, தாக்குதலை எதிர்கொள்ளும் திறன் வாய்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.