ஈரான் அதிபர் இப்ராஹிம் ஹெலிகாப்டர் விபத்தில் பலி

May 20, 2024

ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். ஈரான் நாட்டின் அதிபராக இருந்தவர் இப்ராஹிம் ரைசி. இவர் நேற்று அர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணையை திறந்து வைப்பதற்காக சென்றார். அங்கு அர்பைஜானில் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின் இப்ராஹிம் ஹெலிகாப்டரில் ஈரானுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி உசேன் மற்றும் மூத்த அதிகாரிகள் பயணித்தனர். அப்போது அஜர்பைஜான் நாட்டின் எல்லையை ஒட்டி […]

ஈரான் நாட்டு அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார்.

ஈரான் நாட்டின் அதிபராக இருந்தவர் இப்ராஹிம் ரைசி. இவர் நேற்று அர்பைஜானில் புதிதாக கட்டப்பட்ட அணையை திறந்து வைப்பதற்காக சென்றார். அங்கு அர்பைஜானில் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் திறப்பு விழாவில் கலந்து கொண்ட பின் இப்ராஹிம் ஹெலிகாப்டரில் ஈரானுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது அவருடன் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி உசேன் மற்றும் மூத்த அதிகாரிகள் பயணித்தனர். அப்போது அஜர்பைஜான் நாட்டின் எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஜோல்வா நகருக்கு அருகில் பறந்து கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. பின்னர் மிக மோசமான நிலையில் ஹெலிகாப்டர் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஈரான் அதிபர் மற்றும் அவருடன் சென்றவர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. ஈரானில் உள்ள புனித நலமான இமாம் ரேசாவில் அவருடைய மரணம் அதிகாரப்பூர்வமாக நாட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது. ஹெலிகாப்டர் முற்றிலும் உருக்குலைந்துள்ளது. அவருடன் சென்ற அந்நாட்டு அமைச்சர்கள் இருவரும் இறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஈரானின் அடுத்த அதிபராக அந்நாட்டின் துணை அதிபர் முகமது முக்பர் பதவி ஏற்க இருக்கிறார். இவர் தற்காலிக அதிபராக இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 50 நாட்களுக்குள் புதிய அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu