ஈரான் அதிபர் தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் அகமதி நிஜாத் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.
ஈரான் அதிபர் தேர்தல் வரும் ஜூன் 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் அதில் போட்டியிட முன்னாள் அதிபர் அகமதி நிஜாத் தனது பெயரை பதிவு செய்துள்ளார். இது அந்நாட்டின் தலைமை மதகுரு கம்மேனிக்கு சவாலாக உள்ளது. ஏனெனில் மதகுரு கம்மேனிக்கும் அகமது நிஜாத்துக்கும் இடையே சுமுகமான உறவு இல்லை. ஈரான் சட்டப்படி தொடர்ந்து இருமுறை அதிபராக இருந்தவர் மூன்றாவது முறையாக தேர்தலில் போட்டியிட முடியாது. அகமது 2005 முதல் 2013 வரை அதிபராக இருந்தார். அதன் பிறகு அவர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. 2017 ஆம் ஆண்டில் அகமது நிஜாத் தேர்தலில் போட்டியிடுவதற்கு மதகுரு தடையாக இருந்தார். கம்மேனி தலைமையிலான வேட்பாளர்கள் தேர்வு குழு அகமது நிஜாத்தை நிராகரித்தது. இந்நிலையில் இவர் இந்த முறை தேர்தலில் போட்டியிட பதிவு செய்துள்ளார்.
ஈரானில் அகமது நிஜாத் பிரபலமான தலைவராக மக்கள் செல்வாக்குடன் திகழ்கிறார். இதற்கு காரணம் அவர் தொடங்கி வைத்த திட்டங்கள் ஆகும். அது மக்களிடையே வரவேற்பு பெற்றது. முன்னதாக ஈரான் உள்துறை அமைச்சர் அகமது வாகிதி தனது பெயரை வேட்பாளராக பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.