ரஷ்யாவுக்கு போட்டியாக கச்சா எண்ணெய் விலையை குறைத்த ஈராக்

April 12, 2023

இந்தியா, குறைந்த விலையில் ரஷ்யா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. சவுதி அரேபியா, ஈராக் உள்ளிட்ட இறக்குமதியாளர்களை விட குறைந்த விலைக்கு ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதால், அதன் இறக்குமதியை இந்தியா அதிகரித்து வந்தது. இது பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் OPEC கூட்டமைப்பு நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஈராக், ரஷ்யாவுக்கு போட்டியாக, குறைந்த விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது. சராசரியாக, ஒரு பேரல் கச்சா எண்ணெய் 72.14 அமெரிக்க டாலர்கள் […]

இந்தியா, குறைந்த விலையில் ரஷ்யா கச்சா எண்ணெயை இறக்குமதி செய்து வருகிறது. சவுதி அரேபியா, ஈராக் உள்ளிட்ட இறக்குமதியாளர்களை விட குறைந்த விலைக்கு ரஷ்ய கச்சா எண்ணெய் கிடைப்பதால், அதன் இறக்குமதியை இந்தியா அதிகரித்து வந்தது. இது பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் OPEC கூட்டமைப்பு நாடுகளுக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஈராக், ரஷ்யாவுக்கு போட்டியாக, குறைந்த விலையில் இந்தியாவுக்கு கச்சா எண்ணெயை இறக்குமதி செய்கிறது.

சராசரியாக, ஒரு பேரல் கச்சா எண்ணெய் 72.14 அமெரிக்க டாலர்கள் விலையில் இந்தியாவுக்கு ரஷ்யா இறக்குமதி செய்கிறது. அதுவே, சவுதி அரேபிய கச்சா எண்ணெய், பேரல் ஒன்றுக்கு 85.84 அமெரிக்க டாலர்களாக இருந்தது. பிப்ரவரி மாதத்தில் இது 87.626 டாலர்களாக உயர்ந்தது. எனவே, இந்தியா, ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை அதிகரித்தது. தற்போது, ரஷ்யாவுக்கு போட்டியாக, ஈராக், கச்சா எண்ணெய் விலைகளை குறைத்துள்ளது. ஜனவரி மாதத்தில் பேரல் ஒன்றுக்கு 78.92 அமெரிக்க டாலர்களாக இருந்த ஈராக் கச்சா எண்ணெய், பிப்ரவரி மாதத்தில் 76.19 டாலர்களாக குறைக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu