இராக்கில் ஹிஸ்புல்லா நிலைகள் மீது அமெரிக்கா தாக்குதல்

November 23, 2023

ஈராக்கில் உள்ள ஹிஸ்புல்லா முகாம்களின் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது. ஈராக்கில் உள்ள இரண்டு ஹிஸ்புல்லா நிலைகள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது காசா போர் காரணமாக மேற்கு ஆசிய பகுதியில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஈராக்கில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் அமெரிக்க ராணுவ நிலைகளின் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் பாலிஸ்ட்டிக் வகை […]

ஈராக்கில் உள்ள ஹிஸ்புல்லா முகாம்களின் மீது அமெரிக்க போர் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது.
ஈராக்கில் உள்ள இரண்டு ஹிஸ்புல்லா நிலைகள் மீது அமெரிக்கா போர் விமானங்கள் கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது காசா போர் காரணமாக மேற்கு ஆசிய பகுதியில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது தாக்குதல்கள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ஈராக்கில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பினர் அமெரிக்க ராணுவ நிலைகளின் மீது தாக்குதல் நடத்தினர். அவர்கள் பாலிஸ்ட்டிக் வகை ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்கினர். அதற்கு பதிலடியாக ஹிஸ்புல்லா அமைப்பினரின் அல் அன்பார் மற்றும் அல்சாக்கர் பகுதிக்கு அருகே உள்ள மையங்கள் மீது அமெரிக்கா விமான தாக்குதல் நடத்தியது. இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
முன்னதாக சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து இதுவரை சுமார் 66 முறை ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu