ஈராக்கில் பெண்களின் திருமண வயதை ஒன்பதாக குறைக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஈராக்கில் பெண்களின் திருமண வயதை ஒன்பதாக குறைக்கும் மசோதா அந்நாட்டு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி பெண் குழந்தைகள் 9 வயதை எட்டியதும், ஆண் குழந்தைகள் 15 வயதிலும் திருமணம் செய்து கொள்ள முடியும். தற்போது பெண்களின் திருமணத்திற்கான சட்டபூர்வ வயது 18 ஆக உள்ளது. ஆனால் தற்போது உள்ள மசோதாவின்படி பெற்றோர் மற்றும் நீதித்துறை சம்மதம் தெரிவித்தால் 9 வயதில் பெண்களை திருமணம் செய்து கொடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஈராக்கில் சட்டபூர்வ வயது 18 என்றபோதிலும் சுமார் 28% பெண்களுக்கு அந்த வயதை எட்டும் முன்னரே திருமணம் செய்து வைத்து விடுகின்றனர் என்று ஐநாவின் குழந்தைகள் அமைப்பான யூனிசெப் கூறியுள்ளது. தற்போது இந்த திருமண வயது தளர்வு காரணமாக ஈராக்கில் குழந்தை திருமணம் அதிகரிக்க கூடும் என்று பரவலாக கருதப்படுகிறது. எனவே இந்த மசோதாவுக்கு எதிராக ஈராக்கில் உள்ள பெண்கள் போராட்டம் செய்கின்றனர்.














