அயர்லாந்து பிரதமராக சைமன் ஹாரிஸ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
அயர்லாந்து பிரதமராக சைமன் ஹாரிஸ் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் மூலம் இவர் அயர்லாந்தின் மிக இளைய பிரதமராக திகழ்கிறார். இவருக்கு வயது 37. நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் ஹாரிஸுக்கு ஆதரவாக 88 வாக்குகளும், எதிராக 69 வாக்குகளும் பதிவாகின. இதற்கு முன்பு இந்திய வம்சாவளியை சேர்ந்த லியோ மராத்தகர் பிரதமராக இருந்தார். அவர் கடந்த மாதம் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனை தொடர்ந்து சைமன் ஹாரிஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதை அடுத்து தலைநகர் டூப்ளினில் உள்ள அதிபர் மாளிகையில் நாட்டின் பிரதமராக நியமிக்கப்பட்டார்.