டிரம்புக்கு மாதந்தோறும் ரூ.376 கோடி நிதியுதவி வழங்க மஸ்க் முடிவு

July 17, 2024

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்சம் டிரம்புக்கு தேர்தல் முடியும் வரை நிதியுதவி அளிக்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார். அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் யார் பக்கமும் நிற்காமல் நடுநிலை வகிக்கப்போவதாக மஸ்க் கூறியிருந்தார். எனினும் அவர் மறைமுகமாக டிரம்பிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று பரவலாக கூறப்பட்டது. இந்த சூழலில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பிறகு எலான் மாஸ்க் வெளிப்படையாக டிரம்பிற்கு தனது ஆதரவை […]

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்சம் டிரம்புக்கு தேர்தல் முடியும் வரை நிதியுதவி அளிக்க எலான் மஸ்க் முடிவு செய்துள்ளார்.

அமெரிக்காவில் வருகிற நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் யார் பக்கமும் நிற்காமல் நடுநிலை வகிக்கப்போவதாக மஸ்க் கூறியிருந்தார். எனினும் அவர் மறைமுகமாக டிரம்பிற்கு ஆதரவாக செயல்படுகிறார் என்று பரவலாக கூறப்பட்டது. இந்த சூழலில் டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்திற்கு பிறகு எலான் மாஸ்க் வெளிப்படையாக டிரம்பிற்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அதோடு அவருடைய தேர்தல் செலவுகளுக்காக நிதி திரட்டி வரும் கிரேட் அமெரிக்கா பிஏ சி என்ற அரசியலமைப்புக்கு சுமார் ரூ.376 கோடி வழங்க மஸ்க் முடிவு செய்து இருப்பதாக தகவல் வந்துள்ளது. தேர்தல் முடியும் வரை மாதம் தோறும் வழங்க முடிவு செய்துள்ளார். எனினும் எலான் மஸ்க் தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu